வானவில் : கார் கூடாரம்

உலகிலேயே முதல் முறையாக காருக்கு நவீன கூடாரம் உருவாக்கப்பட்டுள்ளது.;

Update: 2018-08-29 08:18 GMT
குடும்பத்தினருடன் காரில் வெளியூர் பயணம் செய்கிறீர்கள், அது மாதிரியான சந்தர்ப்பங்களில் இந்தக் கூடாரம் மிகவும் உதவியாக இருக்கும். மேலும் காரின் மீது தேவையற்ற பொருட்கள் விழுந்து காரை அசுத்தப்படுத்துவதை தடுக்க முடியும். கடுமையான வெப்பத்திலிருந்து காரை காப்பாற்றலாம்.

சுற்றுலா பகுதிகளில் காரின் அருகே இந்தக் கூடாரத்தை அமைத்து குடும்பத்தினரும் அமர்ந்து இளைப்பார முடியும். அதற்கேற்ப விரிவாக்கும் வசதியும் இதில் உள்ளது.

ஹாட்ச்பேக், செடான், பிக்அப் வாகனங்கள், எஸ்.யு.வி., ஜீப் உள்ளிட்ட எத்தகைய வாகனத்திற்கும் இதை பொறுத்த முடியும்.

ரிமோட் கன்ட்ரோல் மூலம் இதை செயல்படுத்த முடியும். இதை விரிக்கவும், மடக்கவும் 8 வினாடிகள் போதும். ரிமோட் கன்ட்ரோலை ஒரு முறை சார்ஜ் செய்தால் 45 நாட்களுக்கு அது செயல்படும். கூடாரத்தை விரிப்பது மற்றும் மடக்குவது போன்ற பணிகளை 10 ஆயிரம் தடவை வரை தடையின்றி செயல்படுத்த முடியும். மணிக்கு 30 மைல் வேகத்தில் காற்று வீசினாலும் கூடாரம் கலைந்து போகாது. இதை நிறுவுவதால் காரில் எந்த கீறலும் ஏற்படாது. ரிமோட் கன்ட்ரோல் மூலம் செயல்படுத்தப்படுவதால் இது திருடு போகாது.

கடற்கரைப் பரப்பில் இதை உங்களுக்கான மேற்கூரையாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் உள்ள யு.எஸ்.பி. போர்ட் மூலம் எல்.இ.டி. விளக்குகளை எரியச் செய்ய முடியும். காரின் மேற்கூரை போல இருப்பதால் வர்த்தகர்கள் இதை விளம்பர நோக்கங்களுக்கும் பயன்படுத்திக்கொள்ள முடியும். 

மேலும் செய்திகள்