வானவில் : திருடு போவதை உணர்த்தும் பேக்
இப்போதெல்லாம் பொருள் வாங்குவதை விட அதை பத்திரமாக பாதுகாத்துக் கொள்வது பெரும் சவாலாக உள்ளது.
அதிலும் அனேகமாக வேலைக்குச் செல்வோர் பெரும்பாலும் லேப்டாப் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை பேக்கில் எடுத்துச் செல்வது வழக்கமாக உள்ளது. நீண்ட தூரத்திலிருந்து அலுவலகம் செல்பவர்கள் ரெயிலிலோ அல்லது பஸ்ஸிலோ பயணிக்கும்போது இத்தகைய பேக்கையும் பாதுகாப்பாக கொண்டு செல்ல வேண்டியிருக்கிறது.
இவர்களுக்கு உதவும் வகையில் திருடு போவதை உணர்த்தும் வகையில் ‘கேரி ஆல்’ என்ற பெயரில் பேக் விற்பனைக்கு வந்துள்ளது. அமேசான் இணையதளத்தில் இதை வாங்கலாம். இதன் விலை ரூ. 4,999 ஆகும். கருப்பு ஆரஞ்சு மற்றும் கருப்பு பச்சை, கருப்பு நீலம் உள்ளிட்ட அழகிய வண்ணங்களில் இது விற்பனைக்கு வந்துள்ளது. இதில் வயர்லெஸ் புளூடூத் கருவி உள்ளது. இது உங்கள் ஸ்மார்ட்போனுடன் இணைக்கப்படுகிறது. இதனால் இந்த பேக் உங்களுக்கு அருகில் இருக்கும் வரை பிரச்சினையில்லை. சில அடி தூரம் இது நகர்ந்தாலும் உடனே உங்கள் ஸ்மார்ட்போனுக்கு தகவல் வந்துவிடும். நீங்களும் எச்சரிக்கையடைந்து பேக்கை பாதுகாக்கும் நடவடிக்கையில் இறங்கலாம்.
இந்த பேக் எளிதில் கிழிக்க முடியாத வகையில், கீறல் விழாத வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. தண்ணீர் புகாத வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளதால் இதனுள் உள்ள லேப்டாப், சார்ஜர், பவர் பேங்க் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் பத்திரமாக பாதுகாக்கப்படும்.
முதுகில் இதை மாட்டிச்செல்லும் போது வியர்வை ஏற்படாத வகையில் இதில் விசேஷமான ஸ்டிராப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இதை எடுத்துச் செல்லும்போது உங்களுக்கு முதுகுப் பகுதியில் வியர்வை வழியாது. அதற்கேற்ற வகையில் மிருதுவான ‘போம்’ பயன்படுத்தப்பட்டுள்ளது. பஸ் மற்றும் ரெயில் சீசன் அட்டைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள மறைமுக இட வசதி, மொபைல் போனை வைக்கும் வசதி, உள்பகுதியில் கிரெடிட் கார்டு, பாஸ்போர்ட் உள்ளிட்டவை வைப்பதற்கான இடமும் இருப்பதால் இது பயணத்துக்கு ஏற்றதாகும். இதன் உயரம் 44.5 செ.மீ., நீளம் 31.5 செ.மீ., அகலம் 15.5 செ.மீ., எடை 930 கிராம். இதற்கு உத்தரவாதம் 18 மாதங்களாகும்.