வானவில் : தூக்கத்தை துரத்தும் கருவி

அசதியான சூழலில் நம்மை தூக்கம் ஆழ்த்திவிடும். பணிப் பளு, போதிய தூக்கமின்மை, அலைச்சல் போன்ற காரணங்கள் தவிர்த்து சில சமயங்களில் சாப்பிட்ட பிறகும் தூக்கம் வந்துவிடும்.

Update: 2018-08-29 06:05 GMT
இரவு நேரங்களில் பணி புரியும்போதும் தூக்கம் கண்களைத் துரத்தும். மாணவர்கள், வாகனம் ஓட்டுபவர்கள், இரவுக் காவலர்கள் உள்ளிட்டவர்கள் தூக்கத்தை துரத்த உதவும் கருவிதான் ஸ்லீப் அலாரம். நம்மை அறியாமல் தூக்கம் கண்களை சொருகும் சமயத்தில் உடலுடன் இணைந்த இந்த கருவி நமக்கு எச்சரிக்கை செய்யும்.

தூக்கம் வர 5 நிமிடம் முன்னதாகவே இது கண்களின் சோர்வை உணர்ந்து எச்சரிக்கை செய்யும். அதற்கேற்ப முகத்தை தண்ணீரால் கழுவிக் கொண்டு அல்லது எச்சரிக்கையோடு செயல்பட இது உதவும்.

ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் வாகன விபத்துகள் தூக்கத்தால் நிகழ்வதாக தெரியவந்துள்ளது. இதில் உள்ள உணர் கருவி உங்களது உடல் செயல்பாடுகளை கணித்து தூக்கம் வருவதற்கு முன்பாகவே எச்சரிக்கை செய்யும். இந்த கருவியை மோதிரம் போல அணிந்து கொள்ளலாம். 

மேலும் செய்திகள்