தாராபுரத்தில் வருவாய் கிராம ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர்கள் சங்கம் சார்பில் தாராபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2018-08-28 22:15 GMT

தாராபுரம

தாராபுரத்தில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர்கள் சங்கம் சார்பில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தாராபுரம் வட்ட செயலாளர் வேலுசாமி தலைமை தாங்கினார். கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தை சேர்ந்த காளிமுத்து, முன்னாள் வட்ட தலைவர் பெரியசாமி ஆகியோர் முன்னிலைவகித்தனர். முன்னாள் வட்ட பொருளாளர் இளங்கோவன் வரவேற்றார்.

கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கவேண்டும். கிராம நிர்வாக அலுவலர் பதவி உயர்வு 30 சதவீதமாக உயர்த்தியும், 10 ஆண்டு என்பதை 6 ஆண்டாக குறைக்க வேண்டும். புதிய கிராம உதவியாளர்களுக்கு பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்த வேண்டும். பொங்கல் போனஸ் கணக்கிட்டு வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முடிவில் வட்ட பொருளாளர் சண்முகம் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்