செய்யாறில் ரூ.1½ கோடியில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வழங்கினார்
செய்யாறில் 524 பயனாளிகளுக்கு ரூ.1½ கோடியில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வழங்கினார்.;
செய்யாறு,
செய்யாறு டவுன் ஆரணி கூட்ரோட்டில் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு தூசி கே.மோகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன், வி.ஏழுமலை எம்.பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். செய்யாறு உதவி கலெக்டர் அன்னம்மாள் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்துகொண்டு, பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.1 கோடியே 52 லட்சத்து 4 ஆயிரத்து 246 மதிப்பில் 524 பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி தமிழக அரசின் சாதனைகளை விளக்கி பேசினார்.
இதில் நகராட்சி ஆணையாளர் ஸ்டான்லிபாபு, மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) பி.நடராஜன், தாசில்தார் மகேந்திரமணி, தெற்கு மாவட்ட கழக செயலாளர் பெருமாள் நகர் கே.ராஜன், நகர பேரவை செயலாளர் கே.வெங்கடேசன், எம்.மகேந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
முன்னதாக பல்லி கிராமத்தில் செயல்படும் உயர்நிலைப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தி தமிழக அரசு அறிவித்ததை தொடர்ந்து பள்ளியில் நடந்த விழாவில் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், தூசி கே.மோகன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர். பின்னர் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர்.