கடைமடை பகுதிக்கு தண்ணீர் செல்லாததை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை போராட்டம்
திருவாரூர் மாவட்டத்தில் கடைமடை பகுதிக்கு தண்ணீர் செல்லாததை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் முற்றுகை போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 391 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர்,
மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு திறந்து விடப்பட்ட தண்ணீர், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் அனைத்திலும் நீர் நிரம்பாமல் உள்ளது. கடைமடை வரை தண்ணீர் சென்று அடையவில்லை.
இதனால் சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டு விதைப்பு செய்யப்பட்ட வயல்கள் காய்ந்து வருகிறது. இதனை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவதாக அறிவித்து இருந்தது.
அதன்படி நேற்று திருவாரூர் வெண்ணாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் முற்றுகை போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மாசிலாமணி தலைமை தாங்கினார். இதில் ஒன்றிய செயலாளர்கள் புலிகேசி (திருவாரூர்), கேசவராஜ் (கொரடாச்சேரி), நகர செயலாளர் மாரியப்பன் மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 20 பேரை போலீசார் கைது செய்தனர். அப்போது தூர்வாரிய வடிகால், வாய்க்கால்கள் பட்டியலை வெளியிட வேண்டும். தூர்வார ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.
டெல்டா மாவட்டங்களில் குடிநீர் தேவைக்கு ஏரி, குளங்களில் தண்ணீர் நிரப்பிடவும், தூர்வார ஒதுக்கப்பட்ட நிதியை முறையாக செலவிடாமல் முறைகேடாக பயன்படுத்தி உள்ள பொதுப்பணித்துறையை கண்டித்தும், மேலும் வடவாறு, திருமேனி ஆறு மற்றும் கிளை வாய்க்கால்களை தூர்வாரக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மன்னார்குடி காந்தி ரோட்டில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடந்தது.
இந்த போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் திருவாரூர் மாவட்ட செயலாளர் சிவபுண்ணியம் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் செல்வராஜ், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஆறு, குளங்களை முறையாக தூர்வாராத பொதுப்பணித்துறையை கண்டித்தும், தூர் வாரும் நிதியை முறைகேடாக பயன்படுத்தியதை கண்டித்தும் கோஷமிட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 50 பெண்கள் உள்ளிட்ட 250 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருத்துறைப்பூண்டியில் நாகை சாலையில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு நடந்த முற்றுகை போராட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ. உலகநாதன் தலைமை தாங்கினார். விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஞானமோகன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் வையாபுரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் விவசாய சங்க மாவட்ட துணைச்செயலாளர் ராஜா, கட்சியின் ஒன்றிய செயலாளர் பாஸ்கர், நகர செயலாளர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 85 பேரை திருத்துறைப்பூண்டி போலீசார் கைது செய்தனர்.
நீடாமங்கலம் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர் நடேச.தமிழார்வன் தலைமை தாங்கினார். விவசாய சங்க மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் ராவணன், விவசாய சங்க ஒன்றிய தலைவர் பாரதிமோகன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் ராதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதே போல நன்னிலம் அருகே பேரளத்தில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு நடைபெற்ற முற்றுகை போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் தீன.கவுதமன் தலைமை தாங்கினார். போராட்டத்தில் ஈடுபட்ட 36 பேரை பேரளம் போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டம் முழுவதும் நடந்த முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 391 பேரை போலீசார் கைது செய்தனர்.