நாகர்கோவில் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் சாவு
நாகர்கோவில் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்டதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
நாகர்கோவில்,
நாகர்கோவில் அருகே உள்ள வெள்ளமடத்தை சேர்ந்தவர் விவேகானந்த் என்ற ஆனந்த் (வயது 32). இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் ஒரு பெண்ணுடன் நாகர்கோவிலுக்கு வந்தார். பின்னர் மீண்டும் வெள்ளமடம் நோக்கி சென்றார். தேரேகால்புதூரில் திரும்பியபோது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளும், விவேகானந்த் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் எதிர்பாராத விதமாக மோதிக் கொண்டன. மற்றொரு மோட்டார் சைக்கிளில் பெருவிளையை சேர்ந்த 2 தொழிலாளர்கள் வந்தனர்.
இந்த விபத்தில் 4 பேரும் ரோட்டில் விழுந்து காயம் அடைந்தனர். அதைத் தொடர்ந்து அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இவர்களில் விவேகானந்த் மட்டும் மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டார்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி விவேகானந்த் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். அதைத் தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பிணவறைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.