பயிர்காப்பீடு வழங்கக்கோரி தாலுகா அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்

விவசாயிகள் அனைவருக்கும் இழப்பீடு வழங்க வேண்டும், வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தினர் தாலுகா அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்தினர்.

Update: 2018-08-28 23:30 GMT

ராமநாதபுரம்,

மாவட்ட தமிழ்நாடு விவசாயிகள் மாவட்ட சங்கத்தின் சார்பில், ராமநாதபுரத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். நெல், பருத்தி, மிளகாய் மற்றும் அனைத்து பயிர்களையும் பயிர் செய்த அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் இன்சூரன்சு இழப்பீடு தொகை வழங்க வேண்டும்.

கடந்த 2016–17–ம் ஆண்டுகளில் விடுபட்ட விவசாயிகளுக்கு பயிர்காப்பீடு தொகை வழங்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரம் தாலுகா அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரம் விவசாயிகள் சங்க நிர்வாகி சிவாஜி தலைமையில் தாலுகா செயலாளர் கல்யாண சுந்தரம், தலைவர் ராமமூர்த்தி, நிர்வாகி தேர்போகி கத்தார் உள்பட ஏராளமான விவசாயிகள் தாலுகா அலுவலகத்திற்குள் குடியேற சென்றனர். அப்போது தாசில்தார் மற்றும் அதிகாரிகள் கலெக்டர் விடுபட்ட விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்காப்பீடு தொகை வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும், விரைவில் ஒதுக்கீடு பெறப்பட்டு அனைத்து விவசாயிகளுக்கும் வழங்கப்படும் என்று தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்