அரசு ஆஸ்பத்திரியில் ரூ.43 லட்சம் செலவில் முதியோர்களுக்கான சிறப்பு வார்டு விஜயகுமார் எம்.பி. தொடங்கி வைத்தார்
ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் ரூ.43 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள முதியோர்களுக்கான சிறப்பு வார்டுகளை விஜயகுமார் எம்.பி. திறந்து வைத்தார்.;
நாகர்கோவில்,
நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் முதியோர்களுக்கு தனியாக தினமும் வெளிநோயாளிகள் பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்த பிரிவில் நாள்தோறும் 60–க்கும் மேற்பட்டோர் வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள். மேலும் முதியோர்கள் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற தனி வார்டு இல்லாத குறை இருந்து வந்தது.
இதை கருத்தில் கொண்ட அரசு மருத்துவக்கல்லூரி டீன் (பொறுப்பு) ராதாகிருஷ்ணன், முதியோரில் ஆண், பெண்களுக்கு தனித்தனி வார்டை உருவாக்க திட்டமிட்டார். அதன்படி ரூ.43 லட்சம் செலவில் சிறப்பு மருத்துவ சிகிச்சை வார்டுக்கு அருகில் இந்த முதியோர் வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. பழைய கட்டிடத்தை முதியோர் வார்டாக புதுப்பிக்க ரூ.17 லட்சமும், முதியோருக்கான சிறப்பு படுக்கை வசதிகள் கொண்ட கட்டில்கள், பரிசோதனைக் கருவிகள் வாங்க ரூ.26 லட்சமும் செலவிடப்பட்டுள்ளது.
மொத்தம் ரூ.43 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள முதியோருக்கான வார்டில் ஆண்கள் பிரிவில் 8 படுக்கை வசதிகளும், பெண்கள் பிரிவில் 8 படுக்கை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. 2 படுக்கை வசதி கொண்ட தீவிர சிகிச்சைப்பிரிவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் முதியோர்கள் வார்டின் வெளிப்பகுதியில் அமர்ந்திருக்க வசதியாக சாய்வு நாற்காலிகள் போன்ற வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
முதியோருக்கான சிறப்பு வார்டு அமைக்கும் பணிகள் முடிவடைந்த நிலையில் இதன் திறப்பு விழா நடந்தது. விழாவுக்கு டீன் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். விஜயகுமார் எம்.பி. முதியோருக்கான சிறப்பு வார்டுகளை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி துணை முதல்வர் லியோ டேவிட், ஆஸ்பத்திரி சூப்பிரண்டு கண்ணன், உறைவிட மருத்துவ அதிகாரி ஆறுமுகவேலன், உதவி உறைவிட மருத்துவ அதிகாரிகள் கலைக்குமார், ரெனிமோள், பேராசிரியர்கள் பிரின்ஸ் பயஸ், வீணா, அரசு வக்கீல் ஞானசேகர், அ.தி.மு.க. நிர்வாகிகள் சகாயம், முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்கிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் விஜயகுமார் எம்.பி. கூறும்போது, “ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் எனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நவீன வசதிகளுடன் கூடிய கண் மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. இதுதவிர டெலிமெடிசன் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அது நோயாளிகளுக்கும், மருத்துவ மாணவர்களுக்கும் மிகவும் பயன் உள்ளதாக அமைந்துள்ளது என டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த மருத்துவக் கல்லூரி மாணவ– மாணவிகள் வசதிக்காக இலவச வைபை வசதி வேண்டுமென கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று உடனே பணிகளை தொடங்க பி.எஸ்.என்.எல். அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளேன். விரைவில் இலவச வைபை வசதி மருத்துவக்கல்லூரியில் செயல்படும்“ என்றார்.