இலவசமாக ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு பயிற்சி பெற ஆசையா?
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான யூ.பி.எஸ்.சி. ஆண்டுதோறும் கணிசமான அளவில் குடிமைப் பணிகளுக்கான (ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்...) காலியிடங்களை நிரப்பி வருகிறது.
ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ், ஐ.எப்.எஸ். போன்ற இந்திய ஆட்சிப் பணிகளில் அமர்வது இளைஞர்கள் பலருக்கும் கனவாக இருக்கலாம். அதில் பலருக்கு அதிகம் செலவு செய்து அதற்கான பயிற்சி மையங்களில் சேர்ந்து படிக்கும் வாய்ப்புகள் இல்லாமல் இருக்கலாம்.
உங்கள் லட்சியத்தை நிறைவேற்றுவதற்காக தமிழக அரசு, ஐ.ஏ.எஸ். உள்ளிட்ட குடிமைப்பணி தேர்வுகளுக்கான பயிற்சியை இலவசமாக வழங்குதற்காக தனியே பயிற்சி அகாடமி ஒன்றை நடத்தி வருவதை பலரும் அறியாமல் இருக்கலாம். தமிழ்நாடு அரசு, அகில இந்திய குடிமைப்பணி தேர்வுப் பயிற்சி மையம் எனப்படும் இந்த அமைப்பு தற்போது, வருகிற 2019-ம் ஆண்டில் சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வை எதிர்கொள்ள விரும்புபவர்களை பயிற்சியில் சேர்த்துக் கொள்வதற்கான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. இதில் சேர்ந்து பயிற்சி பெற தமிழக மாணவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பயின்று பட்டம் பெற்றிருக்க வேண்டும். அவர்கள் 1-8-2019 அன்று 21 வயது முதல் 32 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.
விருப்பமுள்ளவர்கள் முழுமையைான விவரங்களை இணையதளத்தில் அறிந்து கொண்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 19-9-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும்.
நவம்பர் 18-ந் தேதி தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். தேர்ச்சி பெறுபவர்கள் தங்கும் வசதியுடன், முழுநேர பயிற்சியை பெறலாம். தங்கும் வசதியின்றி பகுதி நேரமாக பயிற்சி பெறும் வாய்ப்பும் உள்ளது. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தகுதியான நபர்கள் மட்டுமே பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். முழு நேர பயிற்சியில் 225 பேரும், பகுதி நேர பயிற்சிக்கு 100 பேரும் சேர்க்கப்படுகிறார்கள். இடஒதுக்கீடு பிரிவு வாரியாக சேர்க்கப்படுபவர்கள் எண்ணிக்கையை முழுமையான அறிவிப்பில் பார்க்கலாம். இலவச பயிற்சியான இதற்கு காப்பு கட்டணமாக (Caution Deposit) ரூ.3 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது. முழு நேர பயிற்சிக்கு கூடுதலாக ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது. பயிற்சி முடிந்ததும் இந்த கட்டணம் திருப்பி வழங்கப்பட்டுவிடும். இது பற்றிய விரிவான விவரங்களை www.civilservicecoaching.com என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம்.