நிலக்கரி நிறுவனத்தில் 619 ஆபரேட்டர் வேலை
நிலக்கரி நிறுவனத்தில் ஆபரேட்டர் பணிக்கு 619 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:-
மத்திய நிலக்கரித் துறையின் கீழ் செயல்படும் நிலக்கரி நிறுவனங்களில் ஒன்று நார்தன் கோல்பீல்ட்ஸ் லிமிடெட். வடக்கு மண்டலத்தில் உள்ள நிலக்கரி சுரங்கங்களை நிர்வகிக்கும் இந்த நிறுவனத்தில் தற்போது ஆபரேட்டர் டிரெயினி பணிக்கு 619 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. பிரிவு வாரியாக உள்ள காலியிட விவரம் : டம்பர் ஆபரேட்டர் - 213, டோஸர் ஆபரேட்டர் - 121, மைன் ஆபரேட்டர் - 28, பே லோடர் ஆபரேட்டர் - 21, கிரேன் ஆபரேட்டர் - 34, கிரேடர் ஆபரேட்டர் - 38, ஷோவல் ஆபரேட்டர் - 56, டிரில் ஆபரேட்டர் - 48, டிராக்லைன் ஆபரேட்டர் - 60
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங் களைப் பார்க்கலாம்.
வயது வரம்பு
விண்ணப்பதாரர்கள் 24-9-2018-ந் தேதியில் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 வருடங்களும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டு களும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும்.
கல்வித்தகுதி
மெட்ரிகுலேசன் மற்றும் பிளஸ்-2 படிப்புடன் பணியிடங்கள் உள்ள ஏதேனும் ஒரு பிரிவில் ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்ப பதிவு 10-9-2018-ந் தேதி தொடங்குகிறது. விண்ணப்பிக்க கடைசி நாள் 24-9-2018-ந் தேதியாகும். பின்னர் பூர்த்தியான விண்ணப்பத்தை நகல் எடுத்து குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். நகல் விண்ணப்பம் சென்றடைய கடைசி நாள் 15-10-2018-ந் தேதியாகும்.
விண்ணப்பிக்கவும, விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.nclcil.in என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கவும்.