கடற்படையில் பட்டதாரிகள் சேர்ப்பு

இந்திய கடற்படையில் தகுதியான இளைஞர்கள் பல்வேறு பயிற்சி நுழைவின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளித்து பணி நியமனம் செய்யப்படுகிறார்கள்.;

Update: 2018-08-28 07:51 GMT
பைலட், அப்சர்வர், ஏர் டிராபிக் கண்ட்ரோலர் போன்ற அதிகாரி தரத்திலான பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய அறிவிப்பு  தற்போது வெளியாகி உள்ளது. இது ஷாட் சர்வீஸ் கமிஷனின் கீழ்வரும் பணிவாய்ப்பாகும். இந்த பயிற்சியில் மொத்தம் 22 பேர் சேர்க்கப்படுகிறார்கள்.

இந்த பயிற்சியில் சேர விரும்புபவர்கள் என்ஜினீயரிங் பட்டப்படிப்பு படித்தவர்களாக இருக்க வேண்டும். இறுதியாண்டு படித்துக் கொண்டிருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.

2-7-1995 மற்றும் 1-7-2000-ம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களுக்கு பணிகள் உள்ளன. ஏர்டிராபிக் கண்ட்ரோல் பணிக்கு 2-7-1994 மற்றும் 1-7-1998 தேதிக்குள் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட உடல்தகுதி பெற்றிருக்க வேண்டும். நுண்ணறிவுத்திறன் தேர்வுகள், உளவியல் தேர்வு, உடல்தகுதி தேர்வு மற்றும் நேர்காணல் மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். விருப்பமுள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 14-9-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும்.

இதற்கான நேர்காணல் நவம்பர் 2018 மற்றும் மார்ச் 2019-ல் நடைபெறும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.joinindiannavy.gov.in என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம். 

மேலும் செய்திகள்