ரெயில்வே நிறுவனத்தில் வேலை

கொங்கன் ரெயில்வே கழக நிறுவனம் சுருக்கமாக கே.ஆர்.சி.எல். எனப்படுகிறது.

Update: 2018-08-28 06:28 GMT
தற்போது இந்த நிறுவனத்தில் டிராக்மேன், கலாசி (எலக்ட்ரிக்கல், எஸ் அண்ட் டி, மெக்கானிக்கல்), பாயிண்ட்ஸ்மேன் போன்ற பணியிடங்களுக்கு 100 பேரை தேர்வுசெய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் டிராக்மேன் பணிகளுக்கு 50 இடங்களும், பாயிண்ட்ஸ்மேன் பணிக்கு 37 இடங்களும், கலாசி பணிக்கு 13 இடங்களும் உள்ளன.

10-ம் வகுப்பு படித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 1-7-2018-ந் தேதியில் 33 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ரூ.500 கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் 16-9-2018-ந் தேதியாகும். இது பற்றிய விரிவான விவரங்களை http://konkanrail way.com/ என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம். 

மேலும் செய்திகள்