தானேயில் படகு கவிழ்ந்து விபத்து கடலில் தத்தளித்த 6 மீனவர்கள் நீந்தி கரை சேர்ந்தனர்

தானேயில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கடலில் தத்தளித்த 6 மீனவர்கள் நீந்தி கரை சேர்ந்தனர். மாயமான ஒருவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.;

Update: 2018-08-27 23:16 GMT
தானே,

தானே பயந்தர் பகுதியை சேர்ந்த 7 மீனவர்கள் நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் உத்தன் கடல் பகுதியில் மீன்பிடிக்க படகில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது அடித்த ராட்சத அலையில் சிக்கி படகு கவிழ்ந்தது. இதனால் மீனவர்கள் 7 பேரும் கடலில் தத்தளித்தனர்.

இதில், நேற்று முன்தினம் இரவு 4 மீனவர்கள் நீந்தி கரையை வந்தடைந்தனர்.

இந்தநிலையில் நேற்று காலை மேலும் 2 மீனவர்கள் நீந்தி கரைக்கு வந்து சேர்ந்தனர். கரை சேர்ந்த மீனவர்களுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கடலில் தத்தளித்த ஒரு மீனவர் மட்டும் இன்னும் கரைக்கு வந்து சேரவில்லை. எனவே மாயமான மீனவரை மீட்பு படையினர், மீனவர்கள் தீவிரமாக தேடிவருகின்றனர்.

படகு கவிழ்ந்து மீனவர் மாயமான சம்பவம் பயந்தர் பகுதி மீனவர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்