கட்டுப்பாடுகளை தளர்த்தி விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட அனுமதிக்க வேண்டும் கலெக்டரிடம் மனு

கட்டுப்பாடுகளை தளர்த்தி விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக கொண்டாடிட அனுமதிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.

Update: 2018-08-27 23:00 GMT
கிருஷ்ணகிரி,

தமிழ்நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக உற்சாகத்துடன் கடந்த பல ஆண்டுகளாக அமைதியாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வருடம் ஒரு அரசாணை மூலம் விநாயகர் சதுர்த்தி விழாவை சாதாரண மக்கள் கூட கொண்டாட முடியாத அளவிற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இது இந்துக்களுக்கு மத வழிபாட்டு உரிமையை மறுப்பதை போல உள்ளது. காவல் துறையினர் தற்போது பல இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக கலெக்டர், உதவி கலெக்டரிடம் அனுமதி வாங்க வேண்டும் என கூறி வருகிறார்கள். எனவே கட்டுப்பாடுகளை தளர்த்தி விநாயகர் சதுர்த்தி விழாவை சாமானிய மக்களும் வழக்கம் போல கொண்டாட வழிவகை செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. கிராம ஊராட்சி துப்புரவு பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர் பணியாளர்கள் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் ராஜமாணிக்கம், கவுரவ தலைவர் ராமமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் கலெக்டர் கதிரவனை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் தூய்மை காவலர்களுக்கு 4 மாதங்கள் சம்பளம் வழங்கவில்லை. கேட்டால் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் புது வாழ்வு திட்டத்தின் மூலம் சம்பளம் வழங்கப்படும் என்று கூறி வருகிறார். புதுவாழ்வு திட்டத்தில் கேட்டால் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்களிடம் கேட்டு சம்பளம் பெற்று கொள்ளலாம் என்று கூறி வருகிறார்கள். மீறி கேட்டால் பணியாளர்களை வேலையில் இருந்து நிறுத்தி விடுவோம் என்று மிரட்டுகிறார்கள். குறிப்பாக தளி ஒன்றியத்தில் அஞ்செட்டி ஊராட்சி குந்துகோட்டை, பாளையங்கோட்டை, நாட்ராம்பாளையம் ஆகிய ஊராட்சிகளில் இந்த பிரச்சினை உள்ளது. எனவே இந்த மனு மீது நடவடிக்கை எடுத்து மாதம்தோறும் சம்பளம் வழங்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

தர்மபுரி மாவட்ட முனிசிபல் பஞ்சாயத்து பொது பணியாளர்கள் சங்கம் சார்பில் மாவட்ட பொதுச் செயலாளர் ராமமூர்த்தி கலெக்டரிடம் கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் தேனி மாவட்ட கலெக்டரின் செயல்முறை கடிதத்தில் துப்புரவு பணியாளர்களுக்கு 2016-2017-ம் ஆண்டில் இருந்து தினக்கூலி ரூ.300 ஆக நிர்ணயித்துள்ளார். எனவே தாங்களும் கிருஷ்ணகிரி மாவட்ட துப்புரவு பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்களுக்கு ஊதிய நிர்ணயம் செய்து ஆணை வழங்கிட கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்