சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி: கூலித்தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை கோர்ட்டு தீர்ப்பு
மல்லசமுத்திரம் அருகே, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வழக்கில் கூலித்தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாமக்கல் மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அருகே உள்ள பருத்திபள்ளியை சேர்ந்தவர் ராமதாஸ் (வயது 57). கூலித் தொழிலாளி. அந்த பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 6-ம் வகுப்பு படித்து வந்தாள்.
கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19-ந் தேதி அந்த சிறுமியை, ராமதாஸ் மிட்டாய் வாங்கி தருவதாக கூறி வீட்டிற்கு அழைத்து சென்று, பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் திருச்செங்கோடு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமதாஸை கைது செய்தனர்.
பின்னர் அவர் மீது நாமக்கல் மாவட்ட மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சுசீலா வாதாடினார். இவ்வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட ராமதாசுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி இளங்கோ தீர்ப்பு கூறினார்.
இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ராமதாஸ் கோவை சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.