டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாது மாவட்ட வருவாய் அலுவலரிடம் கிராமமக்கள் கோரிக்கை
திருபுவனம், கொள்ளுக்காட்டில் டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாது என மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேலிடம் கிராமமக்கள் கோரிக்கை வைத்தனர்.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. இதில் பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளித்தனர். தஞ்சை மாவட்டம் திருபுவனம் தென்றல்நகர், பூக்கொல்லை, மருத்துவத்தெரு, தெற்குவீதி, கீழவீதி, கடைவீதியை சேர்ந்த பெண்கள் உள்பட 25-க்கும் மேற்பட்டோர் மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேலிடம் மனு அளித்தனர்.
அதில், நாங்கள் திருபுவனம் கம்பகேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான மனையில் வசித்து வருகிறோம். எங்களுடன் வசிக்கும் நபர், தான் வசிக்கும் மனையில் டாஸ்மாக் கடை நடத்துவதற்கு அனுமதி அளித்துள்ளார். இந்த கடை திறக்கப்படும் பகுதியில் தான் சாய்பாபா கோவில் உள்ளது. டாஸ்மாக் கடை திறக்கப்பட்டால் கோவிலுக்கு நிம்மதியாக சென்று வர முடியாது. பெண்கள், மாணவிகள் தனியாக நடந்து செல்லவே முடியாது. எனவே டாஸ்மாக் கடையை திறப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையென்றால் அனைவரும் ஒன்று திரண்டு பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்று கூறப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டம் பாதிரங்கோட்டை வடக்கு ஊராட்சி கொள்ளுக்காடு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், மாவட்ட வருவாய் அலுவலரிடம் அளித்த மனுவில், கொள்ளுக்காடு கிளைவாய்க்கால் கீழ்க்கரையில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் டாஸ்மாக் கடையை திறக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான ஆயத்த பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாது என கலெக்டரிடம் மனு அளித்தபோது, டாஸ்மாக் அதிகாரிகள் பேச்சுவார்தை நடத்த வருவார்கள் என்றனர். ஆனால் இதுவரை வராமல் கடையை திறப்பதற்காக கிளைவாய்க்காலில் மண்ணை கொட்டி, பாதை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கடை திறக்கப்பட்டால் கீழ்க்கரை வழியாக பள்ளி, கல்லூரி மாணவிகள் செல்ல முடியாத நிலை ஏற்படும். எனவே எங்கள் கிராமத்தில் நிம்மதியாக நாங்கள் வாழ வேண்டும் என்றால் டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாது என்று கூறப்பட்டிருந்தது.
தஞ்சையை அடுத்த பிள்ளையார்பட்டியை சேர்ந்த பெண்கள் சிலர், மாவட்ட வருவாய் அலுவலரிடம் அளித்த மனுவில், பிள்ளையார்பட்டி பகுதியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். இங்கு 6 ஏரி, குளங்களும், 16 ஆழ்குழாய் கிணறுகளும் உள்ளன. இதில் ஏரி, குளங்கள் அனைத்தும் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. ஒரே ஒரு ஆழ்குழாய் கிணற்றில் மட்டுமே தண்ணீர் உள்ளது. இதை தான் அனைவரும் பயன்படுத்தி வருகிறோம். இதனால் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. பிள்ளையார்பட்டி வழியாக கல்லணைக்கால்வாய் செல்கிறது. இவற்றில் தண்ணீர் அதிகஅளவு செல்கிறது. எனவே ராட்சத குழாய்கள் மூலம் ஏரிகளில் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.