இரட்டைமடி வலையை பயன்படுத்தியதாக கூறி எடுக்கப்பட்ட நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி மீனவர்கள் வேலை நிறுத்தம்
இரட்டைமடி வலையை பயன்படுத்தியதாக கூறி எடுக்கப்பட்ட நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி விசைப்படகு மீனவர்கள் நேற்று 3-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
சேதுபாவாசத்திரம்,
விசைப்படகு மீனவர்கள் இரட்டைமடி வலையை பயன்படுத்துவதாக கூறி, தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகுகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது நிறுத்தி வைத்திருக்கும் படகுகளை ஆய்வு செய்வது முறை அல்ல என்றும், கடலில் மீன்பிடிக்கும்போது தவறு செய்தால் நடவடிக்கை எடுங்கள் என்றும் மீனவர்கள், அதிகாரிகளிடம் கூறினர். இதையடுத்து அதிகாரிகள் அங்கிருந்து சென்று விட்டனர்.
இந்த நிலையில் சேதுபாவாசத்திரத்தை சேர்ந்த மீனவர்கள் 5 பேர் இரட்டைமடி வலையை பயன்படுத்தியதாக கூறி, அவர்களின் விசைப்படகுகள் கடலுக்கு செல்ல அதிகாரிகள் அனுமதி டோக்கன் வழங்கவில்லை.
மீனவர்களுக்கான மானிய டீசலையும் வழங்காமல் மீன்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இந்த நடவடிக்கை, தகுந்த ஆதாரமின்றி எடுக்கப்பட்டதாக கூறி மீனவர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.
இரட்டைமடி வலையை பயன்படுத்தியதாக கூறி எடுக்கப்பட்ட நடவடிக்கையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று மீனவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி சேதுபாவாசத்திரம் பகுதியை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் கடந்த 25-ந் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று 3-வது நாளாக வேலை நிறுத்தம் நடந்தது.
இதுகுறித்து விசைப்படகு மீனவர்கள் சங்க தஞ்சை மாவட்ட தலைவர் ராஜமாணிக்கம் கூறியதாவது:-
இயற்கை சீற்றம், மீன்பிடி தடை காலம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மீன்பிடி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விசைப்படகு மீனவர்கள் நஷ்டத்துடன் தொழில் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் தவறான தகவலின் அடிப்படையில் மீன்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதை ரத்து செய்யும் வரை வேலை நிறுத்த போராட்டம் தொடரும்.
மீனவர்களின் இந்த போராட்டத்தை மீன்வளத்துறையோ, மாவட்ட நிர்வாகமோ இதுவரை கண்டு கொள்ளவில்லை. இதனால் சேதுபாவாசத்திரத்தை சேர்ந்த மீன்பிடி தொழிலாளர்கள், மீன் வியாபாரிகள், கருவாடு வியாபாரிகள், துறைமுகங்களில் கடை வைத்து தொழில் நடத்துபவர்கள் உள்பட 3 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
வேலை நிறுத்தம் காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால், சேதுபாவாசத்திரம் மீன்பிடி துறைமுகத்தில் நேற்று விசைப்படகுகள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.