தி.மு.க.வில் என்னை சேர்க்கவில்லை என்றால் பின் விளைவுகளை சந்திக்க வேண்டியது இருக்கும் - மு.க.அழகிரி பேட்டி

தி.மு.க.வில் என்னை சேர்க்கவில்லை என்றால், பின் விளைவுகளை சந்திக்க வேண்டியது இருக்கும் என்று மு.க.அழகிரி கூறினார்.

Update: 2018-08-28 00:15 GMT
மதுரை,

முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி, வருகிற 5-ந் தேதி சென்னையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி நினைவிடம் நோக்கி பேரணி நடத்த உள்ளார்.

இது குறித்து அவர் மதுரையில் இருந்தபடி தனது ஆதரவாளர்களுடன் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். நேற்றும் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும் போது, “கட்சி தொண்டர்களின் விருப்பப்படி சென்னையில் 5-ந் தேதி பேரணி நடத்த உள்ளோம். கருணாநிதி இல்லை என்பதால் தான் தி.மு.க.வை காப்பாற்ற களம் இறங்கி உள்ளோம். தி.மு.க.வில் என்னை சேர்க்கவில்லை என்றால் அதற்கான பின்விளைவுகளை சந்திக்க வேண்டியது இருக்கும்” என்றார்.

அப்போது மு.க.அழகிரியிடம் நிருபர்கள், “நீங்கள் நடத்தும் பேரணியில் தி.மு.க. தலைவர்கள் யாராவது கலந்து கொள்கிறார்களா என்று கேட்டனர். அதற்கு அவர், “உங்களது யூகத்தின் அடிப்படையிலான கேள்விகளுக்கு பதில் அளிக்க இயலாது” என்றார்.

மேலும் செய்திகள்