பள்ளி மாணவர்கள், வயலில் வேலை செய்தவர்களை கதண்டுகள் கடித்தது 6 பேர் மருத்துவமனையில் அனுமதி
ஜெயங்கொண்டம் பகுதியில் பள்ளி வளாகத்தில் இருந்த மாணவர்கள் மற்றும் வயலில் வேலை செய்தவர்கள் என 9 பேரை கதண்டுகள் கடித்தன. இதில் 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று காலை பிளஸ்-2 மாணவ-மாணவிகள் பள்ளி வளாகத்திற்குள் படித்து கொண்டிருந்தனர். அப்போது பள்ளி வளாகத்துக்கு அருகில் இருந்த வேப்பமரத்தில் இருந்து பறந்து வந்த கதண்டுகள் மாணவர்களை கடித்தன. இதனால் மற்ற மாணவ, மாணவிகள் சிதறி ஓடினர்.
இதில் பிளஸ்-2 மாணவரான மருதூரை சேர்ந்த சரண்ராஜ் (வயது 17), பூவாயிகுளம் கிராமத்தை சேர்ந்த தவசீலன்(17), உதயநத்தம் கிராமத்தை சேர்ந்த முருகன்(17) ஆகியோரை கதண்டுகள் கடித்தன. அவர்கள் 3 பேரும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் அங்கராயநல்லூர் பகுதியில் உள்ள ஒரு வயலில் வேலை செய்து கொண்டிருந்த மருதமுத்து(49), அவரது மனைவி முத்துலட்சுமி(45) மற்றும் செல்வகுமாரி(65) சுசிலா(65) உள்பட 6 பேரை கதண்டு கடித்தது. அவர்கள் சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சென்றனர். இதில் 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்ற 3 பேரும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். கதண்டுகள் எங்கிருந்து வந்தன என்பது தெரியவில்லை என்று தொழிலாளர்கள் கூறினர். ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் வேப்பமரத்தில் உள்ள கதண்டு கூட்டை அகற்ற வேண்டும். மேலும் அரியலூர் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் உள்ள கதண்டு கூடுகள் உள்ளது. அவற்றை கண்டறிந்து தீயணைப்பு துறையினர் மூலம் அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.