கிருஷ்ணாபுரம் அரசு காலனியில் குடிநீர் வராததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
கிருஷ்ணாபுரம் அரசு காலனியில் குடிநீர் வராததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.;
வேப்பந்தட்டை,
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரம் அரசு காலனியில் 50–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அரசு காலனி பகுதியில் உள்ள தெருக்குழாய்களில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதி பொதுமக்கள் நேற்று திடீரென்று பெரம்பலூர்–ஆத்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அரும்பாவூர் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அரசு காலனி பகுதிக்கு குடிநீர் சீராக வினியோகம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் பொதுமக்களை சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். குடிநீர் வராததை கண்டித்து பொதுமக்கள் நடத்திய சாலை மறியல் போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியது.