அடிப்படை வசதி கோரி வாயில் கருப்புதுணி கட்டி வந்த கிராம மக்கள்
அருப்புக்கோட்டை அருகே அடிப்படை வசதிகளை செய்து தர கோரி வாயில் கருப்புத்துணி கட்டியப்படி கலெக்டரிடம் கிராமமக்கள் மனு கொடுத்தனர்.
விருதுநகர்,
அருப்புக்கோட்டை அருகே உள்ள பெரியதும்மகுண்டு கிராமத்தை சேர்ந்த ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்த மக்கள் தங்கள் பகுதியில் கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர கோரி வாயில் கருப்புத்துணி கட்டியப்படி கலெக்டர் அலுவலகம் வந்தனர். போலீசார் அவர்களிடம் கருப்புதுணியை அவிழ்த்துவிட்டு கலெக்டரிடம் சென்று மனு கொடுக்க அறிவுறுத்தினர். அதன் பேரில் அவர்கள் வாயில் கட்டி இருந்த கருப்பு துணியை அவிழ்த்துவிட்டு தங்கள் கோரிக்கை மனுவை கலெக்டரிடம் கொடுத்தனர்.