பவுர்ணமியை முன்னிட்டு 2-ம் நாளாக கிரிவலம் சென்ற பக்தர்கள்
பவுர்ணமியை முன்னிட்டு 2-ம் நாளாக பக்தர்கள் கிரிவலம் சென்றனர். மேலும் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.;
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். திருவண்ணாமலை நகரின் மையப்பகுதியில் உள்ள மலையை பொதுமக்கள் சிவனாக வழிபடுவதால் பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். குறிப்பாக சித்ரா பவுர்ணமி மற்றும் தீபத்திருவிழா நாட்களில் திருவண்ணாமலை நகரமே பக்தர்கள் வெள்ளத்தில் மிதக்கும்.
ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் பக்தர்கள் மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் கிரிவலம் செல்வார்கள். அதன்படி, இந்த மாதத்திற்கான கிரிவலம் நேற்று முன்தினம் மாலை 4.05 மணிக்கு தொடங்கி, நேற்று மாலை 5.40 மணிக்கு முடிந்தது. நேற்று முன்தினம் மாலை முதல் விடிய, விடிய ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
நேற்று காலையிலும் 2-ம் நாளாக ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். மேலும் பக்தர்கள் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
கிரிவலத்தை முன்னிட்டு நகரின் முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் சில இடங்களில் பேரி கார்டுகள் வைத்து போக்குவரத்தையும் ஒழுங்குப்படுத்தினர்.