கேரளாவுக்கு நிவாரண பொருட்கள் சென்னையில் இருந்து ரெயில் மூலம் அனுப்பப்பட்டது
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளா பெரும் வெள்ள சேதத்தில் சிக்கியது. இதையடுத்து நாடு முழுவது கேரளாவுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் இருந்தும் பல்வேறு தரப்பினரும் தங்களால் முயன்ற நிவாரண பொருட்களை அனுப்பி வருகின்றனர்.
சென்னை,
அந்த வகையில் எஸ்.ஆர்.எம்.யூ. ரெயில்வே தொழிற்சங்கம் சார்பில் பல்வேறு பொருட்கள் அடங்கிய 25 டன் நிவாரண பொருட்கள் நேற்று சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து கேரளா செல்லும் ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் அனுப்பிவைக்கப்பட்டது. இது தொடர்பாக எஸ்.ஆர்.எம்.யூ. பொது செயலாளர் கண்ணையா கூறியதாவது:-
எஸ்.ஆர்.எம்.யூ. இந்தியாவில் பல மாநிலங்களில் வெள்ள பாதிப்புக்கு உள்ளாகும் போது பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. அந்த வகையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா மாநிலத்துக்கு பல்வேறு உதவிகள் செய்துள்ளோம். இந்த நிலையில் சென்னை, திருச்சி மற்றும் மதுரை கோட்டம் சார்பில் கேரளா முதல்-மந்திரியின் கோரிக்கையின் படி அரசி, தண்ணீர், உடைகள், உணவுப்பொருட்கள் மற்றும் மருந்துகள் உள்ளிட்ட 25 டன் பொருட்களை ரெயில் மூலம் அனுப்பியுள்ளோம். மேலும் 5 லட்சம் பணமும் கொடுத்துள்ளோம். மேலும் ஒரு வாரத்துக்கு தொடர்ந்து பொருட்கள் அனுப்பப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் எஸ்.ஆர்.எம்.யூ. சென்னை கோட்ட செயலாளர் பால் மேக்ஸ்வெல் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.