ஒட்டியம்பாக்கத்தில் இரும்பு கதவில் ஏறி விளையாடிய 3 வயது குழந்தை தவறி விழுந்து சாவு

இரும்பு கதவில் ஏறி விளையாடிய 3 வயது குழந்தை, கீழே தவறி விழுந்து பரிதாபமாக இறந்தது.

Update: 2018-08-26 23:17 GMT
ஆலந்தூர்,

சென்னையை அடுத்த ஒட்டியம்பாக்கம் அரசன்கழனியில் தனியாருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இங்கு வடமாநில தொழிலாளர்கள் அங்கேயே தங்கி கட்டிட வேலை செய்து வருகின்றனர்.

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சங்காராம் என்பவரும் தனது குடும்பத்துடன் அங்கேயே தங்கி கட்டிட வேலையில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு 3 வயதில் பிரபாஷ் என்ற ஆண் குழந்தை இருந்தது.

நேற்று முன்தினம் புதிதாக கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள இரும்பு கதவில் ஏறி குழந்தை பிரபாஷ் விளையாடிக்கொண்டிருந்தது. திடீரென இரும்பு கதவில் இருந்து தவறி கீழே விழுந்துவிட்டது.

இதில் தலையின் பின்பகுதியில் பலத்த காயம் அடைந்த குழந்தையை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை பிரபாஷ் பரிதாபமாக உயிரிழந்தது.

இதுபற்றி பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்