விடுமுறை தினத்தையொட்டி பழனி மலைக்கோவிலில் குவிந்த பக்தர்கள்

விடுமுறை தினத்தை யொட்டி நேற்று பழனி மலைக்கோவிலில் பக்தர் கள் குவிந்தனர். இதன் காரணமாக மின் இழுவை ரெயில் நிலையத்தில் 2 மணி நேரம் பக்தர்கள் காத்திருந்தனர்.

Update: 2018-08-26 21:45 GMT
பழனி, 

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடாக பழனி விளங்கு கிறது. இங்கு தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் வெகு விமரிசை யாக கொண்டாடப்படும். திருவிழா காலங்கள் என்றில் லாமல் ஆண்டு முழுவதும் மலைக்கோவிலுக்கு பக்தர்கள் வருகை இருக்கும். அதிலும் விடுமுறை தினங்களில் வழக்கத்தைவிட இருமடங்கு பக்தர்கள் பழனிக்கு வருகை தருவார்கள்.

அந்த வகையில் விடுமுறை தினமான நேற்று மலைக்கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். இதன் காரணமாக படிப்பாதை, யானைப்பாதை ஆகியவற்றில் பக்தர்கள் கூட்டமாக காட்சியளித்தது.
பக்தர்கள் வருகை அதிகமாக இருந்ததால் மலைக்கோவில் வெளிப்பிரகாரம், பொது, கட்டணம், சிறப்பு தரிசன வழிகளிலும் பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். இதன் காரணமாக நீண்ட நேரம் காத்திருந்த பின்னரே அவர்கள் சாமி தரிசனம் செய்ய முடிந்தது.

அதே போல் மின் இழுவை ரெயில் நிலையத்திலும் நேற்று நீண்ட வரிசை காணப்பட்டது. சுமார் 2 மணி நேரம் காத்திருந்த பின்னரே மலைக்கோவிலுக்கு பக்தர்கள் செல்ல முடிந்தது. மழை பாதிப்புக்கு பிறகு கேரள பக்தர்கள் கூட்டமும் நேற்று மலைக்கோவிலில் இருந்தது. 

மேலும் செய்திகள்