காஞ்சீபுரத்தில் துணிகரம்: 2 வீடுகளின் பூட்டை உடைத்து 35 பவுன் நகை, ரூ.4¼ லட்சம் கொள்ளை
காஞ்சீபுரத்தில் 2 வீடுகளின் பூட்டை உடைத்து 35 பவுன் தங்கநகை மற்றும் ரூ.4¼ லட்சத்தை கொள்ளையடித்தவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் செவிலிமேடு சுசீலா நகரில் வசிப்பவர் ரெங்கநாதன். ஓய்வுபெற்ற அரசு அதிகாரி. இவர் தனது வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றார்.
பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 25 பவுன் தங்கநகைகள் மற்றும் ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்தை கொள்ளையர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. மேலும் வீட்டில் இருந்த மோட்டார் சைக்கிளையும் மர்மநபர்கள் திருடி சென்றுவிட்டனர்.
இதுகுறித்து ரெங்கநாதன் காஞ்சீபுரம் தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
காஞ்சீபுரம் அருகே சிறுகாவேரிபாக்கம் பாலாஜி நகரில் வசிப்பவர் அப்துல்ஹகத். அரிசி வியாபாரி. இவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்மநபர்கள் பீரோவில் இருந்த ரூ.3 லட்சத்து 10 ஆயிரம் மற்றும் 10 பவுன் தங்க நகைகளை திருடிச்சென்றனர்.
இதுகுறித்து பாலுச்செட்டிசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகர் வழக்கு பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகிறார்.