சித்தேரி கிராமத்தில் ரூ.50 லட்சத்தில் திருமண மண்டபம் அன்புமணி ராமதாஸ் எம்.பி. அடிக்கல் நாட்டினார்
சித்தேரி கிராமத்தில் ரூ.50 லட்சத்தில் திருமண மண்டபம் கட்டும் பணிக்கு அன்புமணி ராமதாஸ் எம்.பி. அடிக்கல் நாட்டினார்.;
அரூர்,
தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் அரூர் சட்டமன்ற தொகுதி சித்தேரியில் நவீன வசதிகளுடன் கூடிய திருமண மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டும் விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:- தர்மபுரி மாவட்டத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசிக்கிறார்கள். சித்தேரி மலைப்பகுதியில் 62 குக்கிராமங்கள் உள்ளன. இவற்றில் எந்த அடிப்படை வசதிகளும் கிடையாது. வாழ்வாதாரம் இல்லாததால் ஆந்திராவிற்கு செம்மரம் வெட்ட சென்று பலியானவர்களில் 7 பேர் இந்த மலைவாழ் பகுதியை சேர்ந்தவர்கள்.
இங்கு குடிநீர், சாலை மற்றும் மருத்துவ வசதிகள் வேண்டும் என்று இந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக மாவட்ட கலெக்டரிடமும், மத்திய, மாநில அரசுகளிடமும் பேசி உள்ளேன். தலசீமியா நோய் மலைவாழ்மக்களை அதிக அளவில் பாதிக்கிறது. அரசு இந்த நோயை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து தீர்வுகளை செயல்படுத்த வேண்டும். 8-வழி பசுமை சாலை மக்களுக்கு தேவையில்லை. கடந்த 6 வாரத்தில் சுமார் 150 டி.எம்.சி. தண்ணீர் கடலுக்கு சென்று உள்ளது. மணல் கொள்ளையால் மதகுகள் உடைந்து உள்ளன. தமிழகத்தில் உள்ள 33 ஆறுகளில் தடுப்பணைகள் கட்டினால் 50 டி.எம்.சி. தண்ணீரை சேகரிக்க முடியும்.
இவ்வாறு டாக்டர் அன்புமணிராமதாஸ் எம்.பி. கூறினார்.
விழாவில் உதவி கலெக்டர் புண்ணியகோடி, மாநில துணை பொது செயலாளர் வெங்கடேஸ்வரன், மாவட்ட செயலாளர் இமயவர்மன், முன்னாள் எம்.எல்.ஏ. வேலுசாமி, மாநில துணை தலைவர் அரசாங்கம், வணங்காமுடி, நம்பிராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.