புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
மாங்காடு கிராமத்தில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் சாலைமறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கீரமங்கலம்,
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே மாங்காடு கிராமத்தில் உள்ள பூச்சிக் கடை கடைவீதியில் டாஸ்மாக் கடை ஒன்று இயங்கி வந்தது. இதையடுத்து நீதிமன்ற உத்தரவுபடி டாஸ்மாக் கடை மூடப்பட்டது. இதையடுத்து மீண்டும் அதே பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க நடவடிக்கை எடுத்து வந்த நிலையில், இங்கு டாஸ்மாக் கடை திறக்கக்கூடாது என பொதுமக்கள், மாவட்ட கலெக்டர் மற்றும் டாஸ்மாக் நிர்வாகத்திற்கு பல முறை மனு கொடுத்து வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை திடீரென மாங்காடு கிராமத்தில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு விற்பனை தொடங்கியது. இந்த தகவல் அறிந்த பொது மக்கள் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
தொடர்ந்து நேற்று காலை மாங்காடு கிராமத்தில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூடக்கோரி மாங்காடு பொதுமக்கள், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராஜ் தலைமையில் பூச்சிக்கடை கடைவீதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குடி வட்டாட்சியர் ரெத்தினாவதி, வடகாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பாலசுப்பிரமணியன், வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பகுதியில் டாஸ்மாக் கடை வந்தால் மாங்காடு ஊராட்சி எல்லைக்குள் அதிகமான விபத்துகள் ஏற்படும் சூழ்நிலை வரும். அதனால் டாஸ்மாக் கடை வேண்டாம் என்று பெண்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அதிகாரிகள் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடத்தப்படும். அதுவரை டாஸ்மாக் கடை திறக்கப்படமாட்டாது என்று உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.