திருக்கோவிலூர் நகரில் புதிதாக அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள்

குற்ற சம்பவங்களை தடுக்க திருக்கோவிலூர் நகரில் புதிதாக அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு இயக்கி வைத்தார்.

Update: 2018-08-26 21:45 GMT
திருக்கோவிலூர், 


திருக்கோவிலூர் நகரில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் காவல்துறை சார்பில் புதிதாக கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு, அதனை செயல்பாட்டுக்கு கொண்டு வரும் நிகழ்ச்சி காந்தி சிலை மற்றும் 5முனை சந்திப்பு பகுதியில் நடைபெற்றது. இதற்கு திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் தலைமை தாங்கினார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினசபாபதி, சப்-இன்ஸ்பெக்டர் பாபு, போக்குவரத்து பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் தீபா ஆகியோர் முன்னிலை வகித்தனர். போக்குவரத்து பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானவேல் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கலந்து கொண்டு புதிதாக அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்களை இயக்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:- வரலாற்றிலும், ஆன்மிகத்திலும் சிறப்பு மிக்க நகரமாக திருக்கோவிலூர் உள்ளது. இங்கு திருட்டு, வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் ஏற்கனவே 10 இடங்களில் காவல்துறை சார்பில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.

தற்போது மேலும் காந்தி சிலை மற்றும் 5 முனை சந்திப்பு பகுதிக்குட்பட்ட 6 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் திருக்கோவிலூர் நகரத்தில் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் வர்த்தக பிரமுகர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் போக்குவரத்து பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் ஞானசேகர் நன்றி கூறினார். 

மேலும் செய்திகள்