சதுரகிரி மலையில் பக்தர்களை சுற்றிவளைத்த கரடிகள்: 2 பேர் மயிரிழையில் உயிர் தப்பினர்
சதுரகிரி மலைப்பகுதியில் 3 கரடிகள் பக்தர்களை சுற்றி வளைத்தது. இதில் 2 கரடிகள் தாக்கியதில் சுமைதூக்கும் தொழிலாளி படுகாயம் அடைந்தார்.
பேரையூர்,
மதுரை மாவட்டம், சாப்டூர் சதுரகிரி மலையில் சுந்தரமகாலிங்கம் கோவில் உள்ளது. இங்கு மாதம் தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் வழிபட பக்தர்களுக்கு அனுமதிக்கப்படும். கடந்த பவுர்ணமி தினத்தன்று மலை மீது உள்ள மகாலிங்கத்தை வழிபட நான்கு நாட்கள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
அதை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் தரிசனம் செய்ய சென்றனர்.
தூத்துக்குடி இருதயம்மாள்புரத்தை சேர்ந்த பெருமாள் என்பவருடைய மகன் சுமைதூக்கும் தொழிலாளி தங்கவேல் (வயது40) என்பவர் தனது நண்பர் ஜெபராஜுடன் மலைக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அதன்பின் 2 பேரும் நேற்று அதிகாலை 4 மணிக்கு மலையில் இருந்து இறங்கினர். அவர்கள் தாணிப்பாறை அருகே வரும்போது திடீரென 3 கரடிகள் அவர்களை சுற்றி வளைத்துள்ளன. இதையடுத்து அச்சம் அடைந்த அவர்கள் திசைக்கு ஒருவராக ஓட்டம் பிடித்தனர். இதில் தங்கவேலை துரத்திச்சென்ற 2 கரடிகள் பிடித்து முகம் மற்றும் உடலில் தாக்கி உள்ளன. அவைகளிடம் போராடிய தங்கவேல் லாவகமாக தப்பி ஓடி பாதுகாப்பான இடத்திற்கு சென்றார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் மற்றும் பக்தர்கள் தங்கவேலை மீட்டு வத்திராயிருப்பு ஆரம்ப சுகாதார மையத்தில் சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, “மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி தினங்களில் பக்தர்கள் காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே மலையில் ஏறவோ, இறங்கவோ வேண்டும். பக்தர்கள் மலைமீது ஏறும் போதும், இறங்கும்போதும் வனத்துறை அறிவுரைப்படி நடக்கவேண்டும். விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். இதன் மூலம் வன விலங்குகள் மற்றும் திடீர் வெள்ளம், காட்டுத்தீ உள்ளிட்ட ஆபத்துகளில் இருந்து மீளலாம்“ என்று கூறினார்கள்.