அம்மா மக்கள் முன்னேற்றக்கழக மாநில பொதுக்குழு உறுப்பினராக ஞான.சந்தோஷ்குமார் நியமனம்
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாநில பொதுக்குழு உறுப்பினராக தொழிலதிபரான ஞான.சந்தோஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன்கோவிலை சேர்ந்த தொழிலதிபரான ஞான.சந்தோஷ்குமார் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாநில பொதுக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனை துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து சென்னையில் அவரை ஞான.சந்தோஷ்குமார் சந்தித்து வாழ்த்து பெற்றார். கிருஷ்ணன்கோவில் திரும்பிய அவருக்கு ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்தனர்.