இன்பம் தரும் தனிமை பயணம்
பெண்கள் தனியாக சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு ஆர்வம் காட்ட தொடங்கி இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.;
பெண்கள் தனியாக சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு ஆர்வம் காட்ட தொடங்கி இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. சுற்றுலா தலங்களுக்கு முன்பதிவு செய்து பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கை 75 சதவீதம் வரை உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது. டெல்லி, மும்பை, ஐதராபாத், பெங்களூரு, சென்னை போன்ற நகரங்களை சேர்ந்த பெண்கள் தான் சுற்றுலா செல்வதற்கு அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள்.
கடந்த சில ஆண்டுகளாக சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யும் டிராவல்ஸ் நிறுவனங்கள் மூலம் இணையதளம் வழியே முன் பதிவு செய்வது அதிகரித்து வருகிறது. பெண்கள் வேலைக்கு செல்ல தொடங்கி இருப்பதும், பொருளாதார ரீதியாக ஓரளவு வலுவான நிலையில் இருப்பதும், சுற்றுலா செல்வதற்கு ஆர்வம் காட்டுவதும் இதற்கு முக்கிய காரணங்களாக அமைந்திருக்கின்றன. வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்திருக்கிறது. தனிமை பயணம் பெண்களுக்கு இன்பத்தையும், தன்னம்பிக்கையையும் அதி கரிக்க செய்திருப்பதாக கள ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதுபற்றி சுற்றுலா நிறுவனத்தினர் கூறுகையில், ‘‘கோவா, கொச்சி, ஜெய்ப்பூர், கவுகாத்தி, விசாகப்பட்டினம், திருவனந்த புரம், காஷ்மீர் போன்ற இடங்களை சுற்றிப்பார்ப்பதற்கு நிறைய பேர் ஆர்வம் காட்டு கிறார்கள்.
வெளிநாடுகளை பொறுத்தவரை துபாய், பாலி, வியட்நாம், இலங்கை, கம்போடியா, பாங்காங், சிங்கப்பூர், லண்டன் போன்ற இடங்களுக்கு இன்ப சுற்றுலா செல்ல விரும்புகின்றனர். பெரும்பாலும் தொலை தூர பகுதிகளுக்கு பெண்கள் குழுவாக செல்ல விரும்புகிறார்கள். ஆண்டு தோறும் வெளிநாட்டு சுற்றுப்பயணம் செல்பவர்களின் எண்ணிக்கை 10 சதவீதம் உயர்ந்து கொண்டிருக்கிறது’’ என்கிறார்கள்.