ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு
குயவர்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதுவை மாவட்ட கலெக்டர் சவுத்ரி அபிஜித் விஜய் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
புதுச்சேரி,
புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி வார இறுதி நாட்களில் களஆய்வு மேற்கொண்டு வருகிறார். ஆய்வின்போதுதான் பொதுமக்களின் தேவைகளை அறிந்து கொள்ள முடிகிறது. எனவே அதிகாரிகளும் சைக்கிளில் சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார்.
புதுவையில் தற்போது மழைக்காலம் தொடங்க உள்ளதையொட்டி புதுச்சேரி மாவட்ட கலெக்டர் சவுத்ரி அபிஜித் விஜய் நேற்று காலை திடீரென சைக்கிளில் சென்று டெங்கு தடுப்பு கள ஆய்வு மேற்கொண்டார். கலெக்டர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட அவர் சாரம் மார்க்கெட் பகுதிக்கு சென்றார்.
காமராஜர் சாலையில் வியாபாரிகள் தெருவோர கடைகளை அமைத்து விற்பனை செய்வதை பார்த்தார். உடனே அதிகாரிகளிடம், போக்கு வரத்துக்கு இடையூறாக வியாபாரம் செய்ய அனுமதிக்கக் கூடாது. மார்க்கெட்டிற்குள் மட்டுமே வியாபாரம் செய்ய அனுமதிக்கும்படி நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து குயவர்பாளையம் ஆரம்ப சுகாதாரநிலையத்திற்கு கலெக்டர் சென்றார். அங்கு கழிவுநீர் வாய்க்காலில் குப்பைகள் அடைத்து கழிவுநீர் தேங்கி கிடப்பதை பார்த்தார். அப்போது அங்கு இருந்த அதிகாரிகளிடம் இதேபோல் கழிவுநீர் தேங்கி கிடந்தால் கொசுத்தொல்லை அதிகரித்து டெங்கு காய்ச்சல் வர வாய்ப்பு உள்ளது. எனவே கழிவுநீர் வாய்க்கால்களில் அடைப்பை நீக்கி கழிவுநீர் தேங்காதவாறு பராமரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
அங்கிருந்து நெல்லித்தோப்பு மீன்மார்க்கெட் பகுதிக்கு சென்றார். அங்கும் கழிவுகளை முறையாக அகற்றும்படியும், மழைக்காலத்தில் எந்தவிதமான சுகாதார சீர்கேடுகளும் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கும் படியும் உத்தரவிட்டார். பின்னர் அவர் கலெக்டர் அலுவலகத்திற்கு புறப்பட்டு சென்றார்.