சேதமடைந்த சாலைகளால் பெங்களூரு-கேரளா இடையே பஸ் சேவைகள் ரத்து

கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் (கே.எஸ்.ஆர்.டி.சி.) சார்பில் பெங்களூருவில் இருந்து கேரளாவின் பல்வேறு பகுதிகளுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

Update: 2018-08-26 00:10 GMT
பெங்களூரு,

கேரளாவில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக சாலைகள் சேதமடைந்துள்ளன. அதனால் நாளை(திங்கட்கிழமை) மற்றும் நாளை மறுநாள்(செவ்வாய்க்கிழமை) ஆகிய 2 தினங்களில் பெங்களூருவில் இருந்து கேரளாவுக்கு 10 பஸ்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

அதன்படி, பெங்களூருவில் இருந்து கண்ணணூருக்கு இரவு 9 மணிக்கு புறப்படும் ஏ.சி. பஸ், இரவு 9.30 மணிக்கு புறப்படும் சொகுசு பஸ், கண்ணணூரில் இருந்து பெங்களூருவுக்கு இரவு 9 மணிக்கு புறப்படும் ஏ.சி. பஸ், இரவு 9.30 மணிக்கு புறப்படும் சொகுசு பஸ், பெங்களூருவில் இருந்து கங்கன்காட்டுக்கு இரவு 8.15 மணிக்கு புறப்படும் சொகுசு பஸ், கங்கன்காட்டுவில் இருந்து பெங்களூருவுக்கு இரவு 7.45 மணிக்கு புறப்படும் சொகுசு பஸ், பெங்களூருவில் இருந்து கோழிக்கோடுவுக்கு இரவு 9 மணி மற்றும் இரவு 9.30 மணிக்கு புறப்படும் சொகுசு பஸ்கள், கோழிக்கோடுவில் இருந்து பெங்களூருவுக்கு இரவு 9 மணி மற்றும் இரவு 9.30 மணிக்கு புறப்படும் சொகுசு பஸ்கள் ஆகியவை ரத்து செய்யப் பட்டுள்ளன.

மேற்கண்ட தகவல் கே.எஸ்.ஆர்.டி.சி. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்