கடமலை-மயிலை ஒன்றியத்தில் காய்ந்துபோய் காட்சியளிக்கும் தென்னை மரங்கள்
கடமலை-மயிலை ஒன்றியத்தில் தண்ணீர் இல்லாததால் தென்னை மரங்கள் காய்ந்துபோய் காட்சியளிக் கின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கடமலைக்குண்டு,
எனவே கிராம பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து தென்னை விவசாயம் அதிக அளவில் பாதிப்படைந்துள்ளது. விவசாயிகள் மரங்களை காப்பாற்ற சொட்டு நீர் பாசனம், கிணறுகளை தூர்வாருதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டும் எந்தவித பலனும் கிடைக்கவில்லை. இதனால் மூலக்கடை, முத்தாலம்பாறை, குமணன்தொழு உள்ளிட்ட கிராமங்களில் நீர் இல்லாமல் பல ஏக்கர் பரப்பில் தென்னை மரங்கள் கருகியது.
இந்த கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், தென்னை மரங் களை வெட்டி அழித்துவிட்டு வேறு விவசாயத்திற்கு மாறி வருகின்றனர். இதுகுறித்து விவசாயிகளிடம் கேட்டபோது, நெல், கரும்பு ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக தென்னை விவசாயத்துக்கு அதிக நீர் தேவைப்படுகிறது. தொடர்ந்து மூலவைகை ஆறு வறண்ட நிலையிலேயே காணப்படுவதால் கடமலை- மயிலை ஒன்றியத்தில் நெல், கரும்பு உள்ளிட்ட விவசாயம் முற்றிலுமாக ஆழிந்து போனது. தற்போது தென்னை விவசாயமும் மெதுவாக அழிந்து வருகிறது. இதனால் நஷ்டம் அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதேநிலை தொடர்ந்து நீடித்தால் கடமலை-மயிலை ஒன்றியத்தில் நெல், கரும்பு போல தென்னை விவசாயமும் முற்றிலுமாக அழிந்து போகும் நிலை உள்ளது. எனவே கனமழை பெய்து மூலவைகை ஆற்றில் தொடர்ந்து சில மாதங்கள் நீர் வரத்து ஏற்பட்டால் மட்டுமே தற்போது காய்ந்துகொண்டிருக்கும் தென்னை மரங்களை காப்பாற்ற முடியும், என்றனர்.
கடமலை-மயிலை ஒன்றியத்தில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தென்னை விவசாயம் நடந்து வருகிறது. தென்னை மரங்களுக்கு மூலவைகை ஆறு முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது. இந்த நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக கடமலை- மயிலை ஒன்றியத்தில் போதிய அளவில் மழை பெய்யவில்லை. இதனால் வருடத்தின் பெரும்பாலான மாதங் கள் மூலவைகை ஆறு வறண்ட நிலையிலேயே உள்ளது.