விளைநிலங்களில் செம்மறி ஆடுகளை மேய்க்க அனுமதிக்கும் விவசாயிகள்
விளைநிலங்களில் செம்மறி ஆடுகளை மேய்க்க விவசாயிகள் அனுமதித்து வருகின்றனர்.
கிருஷ்ணரயபுரம்,
கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், மாயனூர், மேலமாயனூர், ரெங்கநாதபுரம், கட்டளை, நத்தமேடு, நடராஜபுரம், சின்னமநாயக்கன்பட்டி, வீரராக்கியம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவில் சோளம் பயிர் செய்திருந்த விவசாயிகள் அவற்றை தற்போது அறுவடை செய்து வருகின்றனர். அடுத்த போக விவசாயத்திற்காக தற்போது காவிரியில் தண்ணீரை பயன்படுத்தி நெல் பயிரிட இப்பகுதி விவசாயிகள் தயாராகி வருகின்றனர். இதனால் சோளம் அறுவடை செய்த விவசாய வயல்கள் தற்போது காலியாக உள்ளன. இதனை அறிந்த திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை, நத்தம் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள செம்மறி ஆடு வளர்ப்போர் குடும்பம் குடும்பமாக செம்மறி ஆடுகளை ஓட்டி வந்து காலியாக உள்ள விவசாய வயல்களில் மேய்த்து வருகின்றனர்.
ஆட்டின் புழுக்கை சிறந்த இயற்கை உரம் என்பதால் இப்பகுதி விவசாயிகள் தங்கள் நிலங்களில் இரவு நேரங்களில் பட்டி போட்டு ஆடுகளை அடைத்து கொள்ள அனுமதி அளிப்பதுடன் ஆடு மேய்ப் பவர்களின் சாப்பாடு செலவுக்கும் பணம் தருகின்றனர். பரவலாக பல பகுதிகளுக்கும் பகல் பொழுதில் மேய செல்லும் ஆடுகளுக்கு அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் தடை ஏதும் ஏற்படுத்தாமல் மேயும் போது போடும் புழுக்கை தங்கள் வயல்களுக்கு உரமாக பயன்படும் என்பதால் அனுமதி அளிக்கின்றனர். இதனால் ஆடு மேய்ப்பவர்கள் எவ்வித தொந்தரவும் இன்றி ஆடுகளை மேய்த்து வருகின்றனர். இதுகுறித்து வடமதுரை வெள்ளம்பட்டியில் இருந்து 150-க்கும் மேற்பட்ட ஆடுகளை ஓட்டி வந்து குடும்பத்துடன் தங்கி ஆடு மேய்த்து வரும் ராஜேந்திரன்(வயது 47) கூறியதாவது:-
எங்களின் முன்னோர்களின் பூர்வீகம் ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பகுதியாகும். பரம்பரை பரம்பரையாக ஆடு மேய்ப்பதையே குலத்தொழிலாக கொண்டவர்கள் அப்பகுதியில் நிலவிய கடும் வறட்சியால் மேய்ச்சலுக்கு வழியின்றியும், தண்ணீரின்றி போனதால் குடும்பத்துடன் ஆடுகளை ஓட்டிக்கொண்டு பிற மாவட்டங்களுக்கு குடி பெயர்ந்தனர். அவ்வாறு 40 ஆண்டுகளுக்கு முன்பு வடமதுரை பகுதிக்கு 50 குடும்பங்களுக்கு மேல் தங்கி உள்ள எங்களுக்கு சொந்தமாக விவசாய நிலங்கள் எதுவும் இல்லை.
இதுபோல் பல பகுதிகளிலும் அறுவடை முடிந்து காலியாக இருக்கும் விவசாய நிலங்களுக்கு ஆடுகளை ஓட்டி சென்று மேய்த்து கஷ்டமான வாழ்க்கையை ஓட்டி வருகிறோம். எங்களுடைய வாரிசுகள் தற்போது இந்த தொழிலில் இருந்து விடுபட்டு பேக்கரி கடைகள், தொழிற்சாலைகள் என பல்வேறு வேலைகளுக்கு செல்ல தொடங்கியுள்ளதால் எங்கள் தலைமுறையுடன் இந்த ஆடு மேய்க்கும் தொழில் மறைந்து போனாலும் வரும் காலங்களில் எங்களது வாரிசுகள் பிற தொழில்களை கற்றுக்கொண்டு வாழட்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.