மளிகை கடையின் பூட்டை உடைத்து ரூ.55 ஆயிரம் திருட்டு மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

ஆலங்குடியில் மளிகை கடையின் பூட்டை உடைத்து ரூ.55 ஆயிரத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2018-08-25 22:45 GMT
ஆலங்குடி,

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள வாணக்கன்காட்டை சேர்ந்தவர் கணேசன். இவர் ஆலங்குடியில் உள்ள ஒரு திரையரங்கம் அருகே சொந்தமாக மளிகைக்கடை நடத்தி வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு, வியாபாரம் முடிந்ததும், கடையில் உள்ள கல்லாவில் ரூ.55 ஆயிரத்தை வைத்து விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். இந்தநிலையில் நேற்று காலை வழக்கம்போல கடையை திறப்பதற்காக கணேசன் அங்கு வந்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கடையின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது கடை கல்லாவில் அவர் வைத்திருந்த ரூ.55 ஆயிரத்தை, மர்மநபர்களை திருடி சென்றது தெரியவந்தது.

பின்னர் இது குறித்து ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் கணேசன் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். மேலும் இந்த திருட்டு குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரூ.55 ஆயிரத்தை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்