திருமங்கலம் கூட்டுறவு சங்கத் தேர்தலில் அ.தி.மு.க.வினர் மோதல் தொடர்பாக 68 பேர் மீது வழக்கு

திருமங்கலம் கூட்டுறவு சங்கத் தேர்தலில் அ.தி.மு.க.வினர் மோதல் தொடர்பாக 68 பேர் மீது வழக்குதொடரப்பட்டு உள்ளது.

Update: 2018-08-25 22:45 GMT

திருமங்கலம்,

திருமங்கலம் கூட்டுறவு கட்டிட சங்க தேர்தலை நடத்த நேற்று முன்தினம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அ.தி.மு.க. பிரமுகர் அழகர் தனது ஆதரவாளர்கள் 50 பேருடன் வந்து ஓட்டு பெட்டிகளை உடைத்து ஓட்டு சீட்டுகளை கிழித்து உபகரணங்களை சேதப்படுத்தியதாகவும், அத்துடன் தேர்தல் அதிகாரிகளை வேலை செய்ய விடாமல் தடுத்ததாகவும் தேர்தல் அதிகாரி அறிவுரசு கண்ணன் திருமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில் அழகர் உட்பட 50 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை கண்டித்து தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நிரஞ்சன் தமது ஆதரவாளர்கள் 18 பேருடன் பஸ் நிலையத்தின் முன்பு மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோ புகார் செய்தார். அதன்பேரில் நகராட்சி முன்னாள் தலைவர் நிரஞ்சன் உள்பட 18 மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்