டால்பின் மிமிக்ரி
இரண்டாம் உலக போர் நடைபெற்ற காலகட்டங்களில், கடற்படை வீரர்களுக்கு அடிக்கடி ஒரு சத்தம் கேட்குமாம்.
சிலசமயங்களில் ‘அவுட், அவுட், அவுட்’ எனவும், சில சமயங்களில் ‘இன், இன், இன்’ எனவும் சத்தமாக கேட்குமாம். எதிரிப்படைகள் அருகில் நெருங்கிவிட்டார்களா...? என்ற அச்சத்தில் கடற்படை தேடும்போது, ‘நாக்’ என்ற டால்பின் மட்டுமே தென்படுமாம். அந்த டால்பின்தான் மனிதர்களின் பேச்சு சத்தத்தை உள்வாங்கி, மனிதனை போலவே மிமிக்ரி செய்திருப்பது, கடற்படை வீரர்களை ஆச்சரியப்படுத்தியதாம்.