தென்காசியில் வாஜ்பாய் அஸ்திக்கு பொதுமக்கள் அஞ்சலி

தென்காசியில் நேற்று வாஜ்பாய் அஸ்திக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

Update: 2018-08-25 09:15 GMT
தென்காசி, 

தென்காசியில் நேற்று வாஜ்பாய் அஸ்திக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

வாஜ்பாய் அஸ்தி

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்தி நேற்று நெல்லையில் இருந்து வாகனத்தில் தென்காசி கொண்டு செல்லப்பட்டது. மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் உடன் சென்றனர்.

வழிநெடுகிலும் அஸ்திக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

நேற்று மாலை 5 மணிக்கு தென்காசி காந்தி சிலை முன்பு அவருடைய அஸ்தி கலசம் வைக்கப்பட்டது. பா.ஜ.க., தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க., கட்சி நிர்வாகிகள் மற்றும் திரளான பொதுமக்கள் அஸ்திக்கு அஞ்சலி செலுத்தினர்.

பொதுமக்கள் அஞ்சலி

பின்னர் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

மறைந்த பிரதமர் வாஜ்பாய் அஸ்தி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதன்படி நெல்லை மாவட்டத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பின்னர், தாமிரபரணி ஆற்றில் கரைப்பதற்காக அஸ்தி கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த அஸ்தி கொண்டு செல்லப்படும் இடங்களில் எல்லாம் பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுமக்கள திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தினார். அவருக்கு நன்றி செலுத்தும் விதமாக தமிழக மக்கள் திரண்டு வந்து அஸ்திக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவருடைய ஆன்மா சாந்தி அடையும், என்றார்.

அவருடன், பா.ஜ.க. மாவட்ட தலைவர் குமரேச சீனிவாசன், பொதுச்செயலாளர் பாலகுரு, தென்காசி நகர பொதுசெயலாளர் குற்றாலிங்கம், பிரசார அணி செயலாளர் விவேக் பாண்டியன், குற்றாலம் நகர தலைவர் செந்தூர் பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்