மரத்துண்டு பாலம்
சாலையில் விழுந்த மரத்தை குடைந்து பாலத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.
அமெரிக்கா கலிபோர்னியாவின் செக்வையா நேஷனல் பார்க்கில் ஒரு விநோத பாலம் இருக்கிறது. சூறாவளி தாக்குதலின் போது ஒரு பிரமாண்ட செக்வையா மரம் சாலையில் முறிந்து விழுந்தது. ஆனால் சாலையில் விழுந்த மரத்தை அப்புறப்படுத்தாமல், அதை குடைந்து வித்தியாசமான பாலத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இந்த பாலத்தின் வழியே பயணிப்பதற்காகவே ஏராளமானோர் செக்வையா நேஷனல் பார்க்கிற்கு படையெடுக்கிறார்களாம்.