புனேயில் சமூகநலத்துறை அலுவலகம் சூறை
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கோரி மராத்தா சமுதாயத்தினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
புனே,
தங்கர் சமுதாயத்தினரும் தங்களை எஸ்.டி. பிரிவில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.
தங்கர் சமுதாயத்தினரும் தங்களை எஸ்.டி. பிரிவில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில், நேற்று புனேயில் உள்ள பழங்குடியின சமூகநலத்துறை அலுவலகத்திற்கு தங்கர் சமுதாயத்தினரை சேர்ந்த 3 பேர் வந்தனர். அவர்கள் அங்கிருந்த பிளாஸ்டிக் நாற்காலி, கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.
மேலும் அவர்கள் கையில் வைத்திருந்த நோட்டீஸ் மற்றும் மஞ்சள் பொடிகளை தூவி அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இதுபற்றி தகவல் அறிந்த புனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.