பா.ஜனதாவின் கொள்கைகளால் நாட்டுக்கு ஆபத்து : தினேஷ் குண்டுராவ் குற்றச்சாட்டு
பா.ஜனதாவின் கொள்கைகளால் நாட்டுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் மாநில தலைவர் தினேஷ் குண்டுராவ் குற்றம்சாட்டியுள்ளார்.
மைசூரு,
மைசூருவில் தனியார் ஓட்டலில் நேற்று கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கர்நாடகத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது, மைசூரு நகருக்கு ஏராளமான நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டுள்ளது. சித்தராமையா செய்த நலத்திட்டங்களை கருத்தில் கொண்டு, இந்த முறை மைசூரு மாநகராட்சி தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி அடையும் என்ற நம்பிக்கை உள்ளது. மைசூரு மாநகராட்சி தேர்தலில் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். அவ்வாறு அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டால், மைசூரு மாநகராட்சியில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெறும்.
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன. மாநில ஆட்சி வேறு, உள்ளாட்சி தேர்தல் வேறு. மாநில கூட்டணி ஆட்சிக்கும், உள்ளாட்சி தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
கூட்டணி ஆட்சிக்கு பங்கம் ஏற்படும் வகையில் காங்கிரஸ் கட்சியினரும், ஜனதா தளம் (எஸ்) கட்சியினரும் பேசக் கூடாது. உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற பிரசாரம் செய்ய வேண்டும். ஒருவர் மீது ஒருவர் குறை கூறக்கூடாது. உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் அவ்வாறு குறை கூறினால், கூட்டணி ஆட்சிக்கு ஆபத்து ஏற்படும். பா.ஜனதா கட்சியின் சில கொள்கைகளால் நாட்டிற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டு மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வன்முறை, கொலை, மிரட்டல், மதகலவரம், கற்பழிப்பு போன்ற சம்பவங்கள் பா.ஜனதாவினரால் நடந்து கொண்டிருக்கிறது.
கவுரி லங்கேஷ், தாபோல்கர், பன்சாரி, கலபுரகி ஆகியோரை கொலை செய்தது இந்து அமைப்பினர் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இவர்களது பட்டியலில் கிரீஷ் கர்னாட், கே.எஸ்.பகவான் உள்பட 20-க்கும் மேற்பட்ட சமூக ஆர்வலர்கள், மூடநம்பிக்கை மற்றும் மதவாதத்திற்கு எதிரானவர்களின் பட்டியல் உள்ளது. அவர்களை கொலை செய்ய திட்டம் நடக்கிறது.
மக்களுக்கு நல்லது செய்வேன், ஊழலை ஒழிப்பேன், சுவிஸ் வங்கியில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்டு வருவேன், வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிப்பேன் என்றெல்லாம் கூறி ஓட்டு வாங்கி ஆட்சியை பிடித்த மோடி, இதுவரை அவர் சொன்ன எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. அதற்கு பதிலாக நிரவ் மோடி, விஜய் மல்லையா உள்ளிட்ட பல ஆயிரம் கோடி கடன் வைத்துள்ள தொழில் அதிபர்களை வெளிநாட்டுக்கு தப்ப வைத்துள்ளார். பல ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய தொழில் அதிபர்கள் அனைவரும் மோடிக்கு நெருக்கமானவர்கள் தான்.
நாட்டில் தலித் மக்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமை தாக்குதல் பற்றி தெரிந்தும், மோடி எதுவும் பேசாமல் மவுனமாக உள்ளார். பா.ஜனதா பற்றியும், இந்து அமைப்பினர் பற்றியும் யாரும் பேசக்கூடாது. அவ்வாறு பேசினால் அனைவரும் இந்து விரோதிகள், தேசதுரோகிகள் ஆவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.