ரெயில் பயணிகளிடம் திருடிய வாலிபர் கைது ரெயில்வே போலீசார் நடவடிக்கை

சர்க்கார் எக்ஸ்பிரஸ் பூங்கா ரெயில் நிலையத்தின் அருகே சென்றபோது அங்கிருந்த வாலிபர் ஒருவர் அவரின் கழுத்தில் இருந்த தங்க நகையை பறித்து விட்டு ரெயிலில் இருந்து குதித்து தப்பிச்சென்றார்.

Update: 2018-08-24 21:30 GMT
சென்னை,

சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி ஸ்ரீ லட்சுமி (வயது 37). இவர் கடந்த மார்ச் மாதம் 9-ந்தேதி சர்க்கார் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏ.சி.பெட்டியில் பயணம் செய்தார். சர்க்கார் எக்ஸ்பிரஸ் பூங்கா ரெயில் நிலையத்தின் அருகே சென்றபோது அங்கிருந்த வாலிபர் ஒருவர் அவரின் கழுத்தில் இருந்த தங்க நகையை பறித்து விட்டு ரெயிலில் இருந்து குதித்து தப்பிச்சென்றார்.

இந்த சம்பவம் குறித்து ஸ்ரீ லட்சுமி எழும்பூர் ரெயில்வே போலீசாரிடம் புகார் கொடுத்தார். இதையடுத்து எழும்பூர் இன்ஸ்பெக்டர் ரோஜா தலைமையிலான போலீசார் தப்பிச்சென்ற வாலிபரை வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பரனூர் ரெயில் நிலையத்தில் சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றித்திரிந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவரது பெயர் வினோத்(29) என்பதும், ஸ்ரீ லட்சுமியிடம் நகை பறித்ததும், மேலும் பல திருட்டு சம்பவங்களில் அவர் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து 2 சவரன் தங்க நகையை மீட்டனர்.

மேலும் செய்திகள்