உத்திரமேரூர் அருகே பரிதாபம் மண்எண்ணெய் குடித்த 2 வயது பெண் குழந்தை சாவு
காஞ்சீபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகே மண்எண்ணெய் குடித்த 2 வயது பெண் குழந்தை பரிதாபமாக இறந்தது.
உத்திரமேரூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூரை அடுத்த நெல்வாய் காலனியை சேர்ந்தவர் லோகநாதன். இவருடைய மனைவி அனிதா. இவர்களுக்கு 2 வயதில் பெட்டிஷா என்ற பெண் குழந்தை இருந்தது.
இவர்கள், உத்திரமேரூரை அடுத்த பென்னலூரில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவுக்காக அங்குள்ள தங்கள் உறவினர் செந்தில்குமார் வீட்டுக்கு சென்றனர். அவரது வீட்டில் ஒரு பாட்டிலில் மண்எண்ணெய் வைத்து இருந்தனர்.
அங்கு விளையாடிக்கொண்டிருந்த குழந்தை பெட்டிஷா, தவறுதலாக அந்த பாட்டிலை திறந்து அதில் இருந்த மண்எண்ணெய்யை குடித்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த குழந்தை பெட்டிஷாவை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி குழந்தை பெட்டிஷா பரிதாபமாக உயிரிழந்தது. இது குறித்து பெருநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.