ஸ்கூட்டர் மீது கார் மோதல்; விவசாயி பலி

திண்டிவனம் அருகே ஸ்கூட்டர் மீது கார் மோதியதில் விவசாயி பலியானார்.

Update: 2018-08-24 22:00 GMT

திண்டிவனம், 

திண்டிவனம் அருகே உள்ள கோணேரிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை(வயது 68), விவசாயி. இவர் நேற்று காலை ஒலக்கூரில் இருந்து தனது ஸ்கூட்டரில் வீட்டுக்கு புறப்பட்டார். கோணேரிக்குப்பம் திருச்சி–சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது, திண்டிவனத்தில் இருந்து சென்னை நோக்கி எதிரே வந்த கார் ஒன்று ஏழுமலை ஓட்டிச் சென்ற ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் ஸ்கூட்டரில் இருந்து தூக்கி வீசப்பட்ட ஏழுமலை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த ஒலக்கூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, விபத்தில் பலியான ஏழுமலை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்