கஞ்சா விற்ற பெண் உள்பட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

கஞ்சா விற்ற பெண் உள்பட 2 பேரை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.;

Update: 2018-08-24 22:30 GMT

கடத்தூர்,

கோபி அருகே உள்ள மொடச்சூர் குட்டைமேடுவை சேர்ந்தவர் கீரிவாயன். அவருடைய மனைவி (வயது 64). அதே பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (53). இவர்கள் கடந்த ஜூலை மாதம் 17–ந் தேதி அன்று சந்தைப்பேட்டை பகுதியில் நின்று கொண்டு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தார்கள்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கோபி போலீசார் அங்கு சென்று 2 பேரையும் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து தலா 1½கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 2பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்