திருவள்ளூரில் மேற்கூரை இடிந்து விழும் நிலையில் உள்ள ரெயில்வே போலீஸ் நிலையம்
திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் இருந்து தினமும் சென்னை, அரக்கோணம், திருத்தணி போன்ற பகுதிகளுக்கு சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ரெயில் மூலம் சென்று வருகின்றனர்.
திருவள்ளூர்,
சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் இந்த போலீஸ் நிலையத்தில் 25-க்கும் மேற்பட்ட ரெயில்வே போலீசார் பணிபுரிந்து வருகின்றனர். ரெயில்வே போலீஸ் நிலையம் கட்டி 30 ஆண்டுகளுக்கு மேல் ஆவதால் தற்போது கட்டிடத்தின் மேற்கூரை சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரியும் அளவுக்கு மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
ரெயில் நிலைய நடைமேடையையொட்டி இந்த போலீஸ் நிலையம் அமைந்து உள்ளதால் தினமும் அந்த வழியாக எக்ஸ்பிரஸ் ரெயில்கள் செல்லும்போது அந்த அதிர்வில் மேற்கூரையில் இருந்து சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்த வண்ணம் உள்ளது. மேலும் மேற்கூரை மற்றும் சுவரில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இதனால் ரெயில்வே போலீசார் அச்சத்துடன் பணிபுரிந்து வருகின்றனர். அந்த கட்டிடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.
எனவே இடிந்து விழும் நிலையில் உள்ள திருவள்ளூர் ரெயில்வே போலீஸ் நிலையத்தை சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு, புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என ரெயில் பயணிகள் மற்றும் ரெயில்வே போலீசார் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இந்த ரெயில் நிலையத்தில் நடக்கும் குற்றச்சம்பவங்கள் மற்றும் விபத்துகளை விசாரிக்க ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீஸ் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது.