வாஜ்பாய் அஸ்திக்கு பொது மக்கள் அஞ்சலி நாளை கடலில் கரைக்கப்படுகிறது
வாஜ்பாயின் அஸ்தி புதுச்சேரிக்கு நேற்று வந்தது. அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் எடுத்துச் செல்லப்பட்ட வாஜ்பாயின் அஸ்திக்கு பொது மக்கள் அஞ்சலி செலுத்தினார்கள். அந்த அஸ்தி நாளை புதுவை கடலில் கரைக்கப்படுகிறது.
புதுச்சேரி,
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த 16-ந்தேதி மரணமடைந்தார். 17-ந்தேதி டெல்லியில் அவரது இறுதி சடங்கு நடந்தது. அதைத்தொடர்ந்து அவரது அஸ்தி நாட்டில் உள்ள புனித நதிகள், கடலில் கரைக்க திட்டமிடப்பட்டது.
அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் பாரதீய ஜனதா தலைவர்கள் டெல்லி சென்று பிரதமர் வாஜ்பாயிடம் அஸ்தி கலசங்களை வாங்கி தங்கள் மாநிலங்களுக்கு எடுத்து சென்றுள்ளனர். அதன்படி புதுவை மாநில பா.ஜனதா கட்சி தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ., செயலாளர் அருள்முருகன் ஆகியோர் டெல்லி சென்று வாஜ்பாயின் அஸ்தியை 2 கலசங்களில் பெற்று வந்தனர்.
அஸ்தி கலசத்துடன் நேற்று அவர்கள் பெங்களூரில் இருந்து விமானம் மூலம் புதுச்சேரி வந்தனர். புதுவை விமான நிலையத்தில் பாரதீய ஜனதாவின் முக்கிய நிர்வாகிகள் திரண்டு அதற்கு மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.
அதைத்தொடர்ந்து வாஜ்பாயின் அஸ்தி கலசம் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. இந்த அஸ்தி கலச ஊர்வலம் லாஸ்பேட்டை, காலாப்பட்டு, தட்டாஞ்சாவடி, இந்திராநகர், ஊசுடு, உழவர்கரை, கதிர்காமம், அரியாங்குப்பம், தவளக்குப்பம், பாகூர், ஏம்பலம், நெட்டப்பாக்கம் ஆகிய பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது திரளான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
அதன்பின் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அஸ்தி கலசம் வைக்கப்பட்டது. இன்று (வெள்ளிக்கிழமை) அஸ்தி கலச ஊர்வலம் நெல்லித்தோப்பு, உருளையன்பேட்டை, முத்தியால்பேட்டை, ராஜ்பவன், உப்பளம், முதலியார்பேட்டை, வில்லியனூர், மங்கலம், திருபுவனை, மண்ணாடிப்பட்டு, ஊசுடு ஆகிய தொகுதிகளுக்கு செல்கிறது.
நாளை (சனிக்கிழமை) காலை 7 மணிமுதல் 9 மணிவரை கட்சியின் தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அஸ்தி கலசம் வைக்கப்படுகிறது. காலை 9 மணிக்கு கட்சியின் தலைமை அலுவலகத்தில் இருந்து மவுன ஊர்வலம் அஸ்தி கலசத்துடன் தொடங்குகிறது. ஊர்வலம் காந்தி திடலுக்கு வருகிறது. அங்கு மலர்அஞ்சலி கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் கவர்னர் கிரண்பெடி, முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கலந்துகொள்கின்றனர். அஞ்சலி கூட்டத்தின் இறுதியில் புதுவை கடலில் வாஜ்பாயின் அஸ்தி கரைக்கப்படுகிறது.